Saturday 28 June 2014

ஃபித்ராவின் நோக்கம்

அல் - மாஸ் கல்வி மற்றும் பொது நல அறக்கட்டளை, பூந்தோட்டம்.
AL MAAS EDUCATIONAL & SOCIAL WELFARE TRUST, POONTHOTTAM.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும்.  முஸ்லிமான ஆண்கள்,    பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.

முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)             நூல்: புகாரி 1503
ஃபித்ராவின் நோக்கம்
இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட்டுள்ளது.
நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன் பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழை களுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)                     நூல் : அபூதாவூத் 137, இப்னுமாஜா 1817

கடந்த ஆண்டு 2013 ரமளான் மாதம் இறுதியில் ஃபித்ரா பணம் மூலம் 35  குடும்பங்களுக்கு                   பெருநாளைக்கு தேவையான பொருள்கள் வாங்கி தந்தோம் இன்ஷா அல்லாஹ் இந்த வருடமும்
    செய்ய இருக்கிறோம்.
2013 ஆண்டு  35  குடும்பங்கள், 2014 இந்த வருடம் 70 குடும்பங்கள் செய்ய இருக்கிறோம். ஒரு குடும்பத்திற்க்கு 500 ரூபாய் நிர்ணைத்துள்ளோம்.

P1080085.JPG

ஜீனி -‍‍ 1/2
மைதா -1/2
கோதுமை மாவு - 1/2
பிரியாணி அரிசி -1 கி
எஸ்.வி.எஸ். ஆயில் - 1/2
R.K.G . நெய் - 50
டீ.தூள் - 50
உப்பு - 1 கி
ரவா - 1/2
பிரியாணி மசாலா - 50
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 50
கடுகு - 50
பல்லாரி - 300
மிளகு - 25
ஜீரகம் - 25
சோம்பு - 50
மஞ்சள் தூள் -50
மிளகாய் தூள் - 50
புளி - 100
முந்திரி, திராட்சை, ஏலக்காய்
சேமியா - 1 பாக்கெட்
பால் - 1/2
முட்டை - 10
கோழி - 1/2

No comments:

Post a Comment